மக்களவைத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்..!
மக்களவைத் தேர்தல் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
ஆந்திரா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் தொடங்கியது
ஆந்திராவின் 175 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு
10 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
ஆந்திர சட்டசபையின் 175 தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது
வாக்குப்பதிவு மையங்களில் காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்
ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது
நக்சல்கள் தாக்கம் அதிகமுள்ள 6 தொகுதிகளில், 3ல் மாலை 4 மணிக்கும், எஞ்சிய 3 தொகுதியில் மாலை 5 மணிக்கும் வாக்குப்பதிவு நிறைவடையும்
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில், அதிகபட்சமாக திருப்பதி தொகுதியில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
திருப்பதியில், சட்டமன்ற வாக்குப்பதிவு 3 EVMகளும், மக்களவை தேர்தலுக்கு ஒன்றும் என 4 EVMகள் பயன்படுத்துகின்றன
தெலங்கானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பத்து மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் களம் கண்டுள்ளனர்
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணமுல் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் களம் கண்டுள்ளனர்
சத்ருகன் சின்ஹா, யூசுப் பதான், ஓவைசி, அர்ஜுன் முண்டா, ஒய்.எஸ்.ஷர்மிளா உள்ளிட்டோ களம் கண்டுள்ளனர்
Comments