ஐ.பி.எல்.: ராஜஸ்தானை 5 விக். வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி

0 1172

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 14 புள்ளிகளுடன் தனது பிளே ஆப் வாய்ப்பை சென்னை அணி பிரகாசப்படுத்திக்கொண்டது.

முதலில் விளையாடிய ராஜஸ்தான் 141 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த ஆடிய சென்னை, 18 புள்ளி 2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

முன்னதாக, ஆட்டம் முடிந்ததும் ரசிகர்களை மைதானத்தை விட்டு வெளியேறாமல் காத்திருக்கும்படி சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, ராஜஸ்தானை தோற்கடித்து சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. பெற்ற 50-ஆவது வெற்றிக்காக, வீரர்கள் அனைவருக்கும் நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது.

நடப்பு சீசனில் கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு அணி நிர்வாகமும், மைதானத்தைச் சுற்றி வந்தும் வீரர்களும் நன்றி தெரிவித்தனர்.

அத்துடன், மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு வீரர்கள் கையெழுத்திட்ட அணியின் ஜெர்சி மற்றும் டென்னிஸ் பந்துகள் வழங்கப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments