மிரட்டும் வெஸ்ட் நைல் காய்ச்சல் நரம்பு மண்டலம் பாதிக்குமாம் கோவையில் உஷார் நிலை..! பீதி அடைய வேண்டாம் என அறிவிப்பு

0 644

கேரளாவில் வெஸ்ட்  நைல் வைரஸ் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானதை தொடர்ந்து தமிழக கேரள எல்லைப்பகுதியான கோவையில் சுகாதாரத்துறை உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

வெஸ்ட் நைல் வைரஸ் , கியூலெஸ் என்னும் ஒருவகை கொசுக்கள் கடிப்பதால் பரவும் வைரஸ் காய்ச்சல் ஆகும்.

1937 ஆம் ஆண்டு உகாண்டாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அதன் பின்னர் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்தநோய் அமெரிக்கா, ஐரோப்பா, மத்தியகிழக்கு வடஅமெரிக்கா, மேற்குஆசியா பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது

சமீபத்தில் இந்தியாவில் கேரளாவில் உள்ள கோழிக்கோடு, மலப்புரம், மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 47 வயது நபர் உயிரிழந்துள்ளார். வெஸ்ட் நைல் வைரஸ் டெங்கு, சிக்குன் குனியாவை போன்று கொசுக்கள் வாயிலாக பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பிறருக்கு பரவும் தன்மை கொண்டது.

இதன் காரணமாக கோவை , தென்காசி, பொள்ளாச்சி, தேனி பகுதியில் தமிழக கேரள எல்லை பகுதியில் நுழையும் அனைத்து வாகங்களுக்கும் மருந்து தெளித்து தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

வெஸ்ட் நைல் வைரஸ் பரவினால், காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி, போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும் என்றும் ஒருசிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிககாய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், உணவின்மை, வலிப்பு, தசைபலவீனம், மூளைக்காய்ச்சல் மற்றும் நரம்பு மண்டலத்தை தாக்கி பக்காவாதம் உண்டாக்கும் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

இந்த வைரஸ் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் நோய்எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை எளிதாக தாக்கும் எனவே, வெஸ்ட் நைல் வைரஸ் அறிகுறிகள் இருப்பின் குறிப்பாக மூளைக்காய்ச்சல் பாதிப்பு உடையவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்
இந்த நோயை எலைசா பரிசோதனை மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறியலாம் என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

அதேபோல நோய்தொற்று சந்தேகிக்கப்படும் நபரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு பூனாவில் உள்ள நோய்வைரஸ் ஆராய்ச்சிமையத்தில் பரிசோதனை செய்ய வசதி உள்ளது.

எனவே இந்த காய்ச்சல் காரணமாக எந்தஇடத்தில் பரவினாலும் பொதுமக்கள் பீதி அடையவேண்டாம் என்றும் காய்ச்சலுக்கான உரிய சிகிச்சை மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த காய்ச்சலினால் ஏற்படும் நீரிழப்பினை தவிர்த்திட போதிய நீர்மற்றும் திரவ உணவை உட்கொள்ளவேண்டும்.

வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், நீர்தேய்க்காமல் பாதுகாக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்த நோய்க்கு தடுப்பூசிகள் ஏதுமில்லை என்பதால் உடனடியாக சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கொசுக்கள் கடிக்காமல் இருக்கும் வகையில் உடலை மறைக்கும் முழுமையான ஆடைகளை அணியவேண்டும், கொசுவலைகளையும், கொசுவிரட்டிகளையும் பயன்படுத்தவேண்டும் எனவும் பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments