சி.பி.சி.எல். நிறுவனத்தைக் கண்டித்து கிராம மக்கள் 11-வது நாள் போராட்டம்

0 306

நாகூர் அருகே பனங்குடியில் சி.பி.சி.எல். நிறுவன ஆலை விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கான அளவீட்டு பணிகளில் 4 வட்டாட்சியர்கள் தலைமையில் 48 அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.

90 சதவீத பணிகள் முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில் நரிமணம் வெள்ளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எல்லைக் கல் பதிக்கும் பணியினை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்து அங்கு சென்ற போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் பலன் ஏற்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments