நாட்டு வெடிகுண்டு தயாரிக்க முயன்ற சிறுவன் உட்பட 3 பேர் கைது

0 287

சென்னையை அடுத்த சித்தாலபாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க முயன்றதாகக் கூறப்படும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகரில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது புதர் மறைவில் பதுங்கி இருந்தபடி அந்த 6 பேரும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க முயன்று கொண்டிருந்ததாகவும், அவர்களை பிடிக்க முயன்ற போது 6 பேரும் தப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் விட்டுச் சென்ற நாட்டு வெடி தயாரிப்பதற்கான பொருட்கள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை துரத்திச் சென்று பிடித்து எதற்காக நாட்டு குண்டு தயாரித்தார்கள் என விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments