விமான பயணியிடமிருந்து 2,332 கிராம் எடையுள்ள 20 தங்கக்கட்டிகள் பறிமுதல்
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்து 332 கிராம் எடை கொண்ட 20 தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரியை சேர்ந்த காதர் மைதீன் என்பவர் அணிந்திருந்த ஜீன்சின் இடுப்பு பட்டையோடு சேர்த்து தைக்கப்பட்ட பகுதிகளில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments