பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பது குறித்து உற்பத்தியாளர்கள் - மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆலோசனை
பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பது குறித்து, 200-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்களுடன் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், சிவகாசியில் ஆலோசனை நடத்தினர்.
அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது, விதிமுறையை மீறி அளவுக்கு அதிகமாக ரசாயன மூலப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுறைகளை அதிகாரிகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
விதிமுறையை மீறி செயல்படும் ஆலையின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும், உரிமையாளர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Comments