சென்னையில் காவல்நிலைய அமைச்சு பணியாளர் வீட்டில் கொக்கைன் போதைப் பொருளை பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது
கொக்கைன் போதைப்பொருளை வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்ததாக காவல்நிலைய அமைச்சு பணியாளர் உள்பட இருவரை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில், யானைக்கவுனி காவல் நிலையத்தில் டேட்டா ஆபுரேட்டராக பணியாற்றிய ரமேஷ் அரவிந்த் என்பவரின் கொளத்தூர் வீட்டில் 3 கிராம் கொக்கைனும், வியாசர்பாடி எம்.கே.பி நகரைச் சேர்ந்த நரேஷ் என்பவரின் வீட்டில் 5 கிராம் கொக்கைனையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
Comments