திருவாரூரில் பாஜக முன்னாள் பிரமுகர் மீது தாக்குதல்... பாஜக மாவட்டத் தலைவர் கைது
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்த பாஜக முன்னாள் பிரதிநிதி மதுசூதனனை அவரது அடகுக் கடை வாசலில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், சில தினங்களுக்கு முன் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியது.
அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கர், கும்பகோணத்தைச் சேர்ந்த சரவணன், ஜெகதீசன் ஆகிய மூவரை கைது செய்த போலீஸார், மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்றனர்.
Comments