இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு தம்பதியர்

0 573

கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தம்பதியர் திருக்கடையூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். ஐ.டி. துறையில் பணியாற்றிவரும் டிமித்ரி - எலெனா தம்பதியர், ஆண்டுக்கு ஒரு முறை தமிழகம் வந்து, இங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.

அப்போது தமிழ் கலாச்சாரம் மீது ஏற்பட்ட பற்றால் தமிழகத்தில் மணமுடிக்க முடிவெடுத்து நாடி ஜோதிடர் ஒருவரின் ஏற்பாட்டில், நலங்கு வைத்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மாலை மாற்றி, தாலி கட்டிக் கொண்டனர்.

தொடர்ந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்று அவர்கள் சுவாமி தரிசனமும் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments