டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்... விஜயகாந்துக்கான பத்மபூஷன் விருதை பெற்றார் பிரேமலதா

0 383

கல்வி, இலக்கியம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுதலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல்கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களுக்கு 2வது கட்டமாக நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பரதநாட்டியக் கலைஞர் வைஜயந்தி மாலாவிற்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட சமூக சேவகருக்கான பத்மபூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா பெற்றுக் கொண்டார். கர்நாடகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சமூகசேவகரான ராஜண்ணாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments