உதகையில் இன்று துவங்குகிறது 126-வது மலர் கண்காட்சி
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது.
10 நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியில், பல வண்ணங்களைக் கொண்ட ஒரு லட்சம் கார்னேசன்,ரோஜா,சாமந்தி மலர்களைக் கொண்டு பிரமாண்ட டிஸ்னி வேர்ல்டு, நீலகிரி மலை இரயில், காளான், ஆக்டோபஸ் மற்றும் மலர்க் கோபுரங்கள் உட்பட 10 வகையான மலர் அலங்காரங்கள் காட்சிக்கு தயார் நிலையில் உள்ளன.
தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.மேலும் 45 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர்க் காட்சி மாடத்தில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன.
Comments