ஜேஇஇ நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடி யில் 4 ஆண்டு இலவச பட்டப் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம் - வயதும் தடையில்லை

0 231

ஜேஇஇ நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடி யில் 4 ஆண்டு இலவச பட்டப் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்" திட்டத்தின் கீழ், டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ் ஆகிய 4 ஆண்டுகால இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் படிப்புகளில் சேரும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் வழங்கும் ஊக்கத்தொகை போக மீதமுள்ள கல்வி கட்டணத்தை தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments