காங். நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் கூலிப்படையினர் தகவல்களை திரட்டி வரும் போலீசார்..
நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கூலிப்படையால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த கூலிப்படையினர் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜெயக்குமார் தனசிங்கின் இரண்டாவது மகன் ஜோ மார்ட்டின் வீட்டுக்கு சென்ற டி.எஸ்.பி.யின் போனில் வீடியோ கால் மூலம் சில கேள்விகள் கேட்டு எஸ்.பி. விவரங்களை கேட்டறிந்ததாக தெரிகிறது.
கரைசுத்துப்புதூர் பகுதியில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வரும் போலீசார், ஜெயக்குமார் தனசிங்கின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆவதற்கு முன் வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்களையும் சேகரித்தும் வருகின்றனர்.
இதனிடையே ஜெயக்குமார் தனசிங் வீட்டில் அவர் பயன்படுத்திய அறை, அலுவலகம் ஆகியவற்றில் தடயவியல் அதிகாரி ஆனந்தி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Comments