திருநங்கை என்பதால் தனியார் கல்லூரிகள் சீட் தருவதில்லை... திருநங்கை மாணவி வேதனை
கோவையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்ட திருநங்கை மாணவி அபிதா, இளங்கலை உளவியல் படிக்க தான் ஆசைப்படுவதாகவும், ஆனால் தன்னால் மற்ற மாணவ, மாணவிகளுக்கு பிரச்சினை ஏற்படக்கூடும் எனக்கூறி தனியார் கல்லூரி நிர்வாகங்கள் சீட் தர மறுப்பதாகவும் கூறினார்.
சென்னையைச் சேர்ந்த நிவேதா மட்டுமே +2 தேர்வில் தேர்ச்சி அடைந்த ஒரே திருநங்கை என்று அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில், திருநங்கை என்பதற்கான ஆவணங்களை வழங்க தாமதமானதால், கோவை அபிதா மாணவர் என்ற கணக்கில் தேர்வு எழுதியதாக அவரது தாயார் தெரிவித்தார்.
Comments