சென்னையில் அரசுப்பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து சென்ற மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு..

0 444

சென்னை விவேகானந்தர் இல்லத்திலிருந்து திரு.வி.க. நகர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கூச்சலிட்டபடி வந்த அம்மாணவர்கள், சென்ட்ரலை நெருங்கியவுடன் காவலர்களிடம் சிக்காமல் இருக்க மேம்பாலம் மீது பேருந்தை நிறுத்தி முன்பக்க கண்ணாடிக்கு முன்பாக கீழே குதித்து நடந்து சென்றனர்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments