பெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலில் 100 மில்லி அளவு குறைவாக இருப்பதை கண்டுபிடித்து அதிரடி காட்டிய வாடிக்கையாளர்கள்..

0 525

மதுரை கோரிப்பாளையத்தில் அம்மன் ஏஜென்சி என்ற பெயரில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் 100 மில்லி அளவு குறைவாக இருப்பதாக இளைஞர்கள் சிலர் தெரிவித்துனர்.

அந்த பங்குக்கு அளவீடு மானி கொண்டு சென்ற அந்த இளைஞர்கள், அதில் பெட்ரோல் ஊற்றச் சொல்லி வீடியோ எடுத்த போது, அளவு குறைவாக இருப்பது உறுதியானதாகவும், அதைச் சுட்டிக்காட்டியதும் பெட்ரேல் விநியோக எந்திரத்தில் ஊழியர்கள் மாற்றம் செய்ததாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர்.

பெட்ரோல் பங்கு பற்றி வீடியோ ஆதாரத்துடன் இளைஞர்கள் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments