கெஜ்ரிவால் தவறு செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல: உச்சநீதிமன்றம்
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் முதலமைச்சரின் பணிகளை தவிர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், தாம் சாதாரண மனிதன் என்று கூறும் கெஜ்ரிவால் 9 முறை சம்மன்களை தவிர்த்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
கெஜ்ரிவால் தவறு செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல என்பதையும் தேர்தல் நேரம் என்ற அசாதாரண சூழ்நிலையையும் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட அமலாக்கத் துறை வழக்கறிஞர், ஜாமீன் மட்டுமே வழங்கினாலும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆதாரமில்லை என மக்கள் நினைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிக்காமல் நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Comments