தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் விசாரணை

0 434

சென்னையை அடுத்த ஆவடியில் கையில் சிறிய கட்டை ஒன்றை வைத்துக் கொண்டு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து இளைஞர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் ரகளையில் ஈடுபட்டார்.

அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் 2 குழந்தைகளுடன் சென்ற குடும்பத்தினர் ரகளையை வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்ற போது தவறி விழுந்தனர். ஒரு குழந்தையின் தலை தரையில் மோதி மயக்கம் அடைந்ததால் பதறிய தாய் மற்றும் தந்தை இருவரும் அவ்வழியே சென்ற காரில் குழந்தையை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ரகளை செய்த அந்த நபரை வாகன ஓட்டிகள் பிடித்து அடித்து உதைத்தனர். அந்த இளைஞரை மீட்டு முதலுதவி அளித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அறிந்து கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments