போலீஸ் வாகனம் விபத்தில் சவுக்கு சங்கருக்கு மட்டுமின்றி போலீசார் 3 பேருக்கும் காயம் என தகவல்

0 302

காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து இழிவாகப் பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்து கோவைக்கு சைபர் கிரைம் போலீசார் அழைத்து சென்ற போது தாராபுரம் அருகே ஏற்பட்ட விபத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதாக அவரது வழக்கறிஞர் கூறிய நிலையில் விபத்தின் காட்சி வெளியாகியுள்ளது.

சாலையை கடக்க முயன்ற காரும் சவுக்கு சங்கரை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனமும் மோதிக் கொண்டதில் சங்கருக்கும் 3 காவலர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments