நட்சத்திர ஓட்டலில் தங்க ஆன்லைனில் அறை முன்பதிவு செய்ததாக மோசடி.. போலி ரசீது காட்டிய ஆந்திர இளைஞரை கைது செய்த போலீசார்

0 341

கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் பகுதியை சேர்ந்த சுதிர் என்ற நபர், ஆன்லைனில்  தான் அறை முன்பதிவு செய்ததாகவும், அதற்கான தொகையை செலுத்திவிட்டதாகவும் ஒரு ரசீதை காட்டினார்.

அந்த ரசீதை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், பந்தய சாலை போலீசார் ஓட்டலுக்கு சென்று போலி பில் கொடுத்த சுதீரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments