போக்குவரத்து காவலர்- வாகன ஓட்டி வாக்குவாதம்... ஆவணங்கள் இருந்தும் அபராதம் விதிக்கப்பட்டதாக ஓட்டுநர் குற்றச்சாட்டு

0 400

சென்னை கொளத்தூரில், அபராதம் விதிக்க முற்பட்ட போக்குவரத்து காவலருக்கும், காரணம் கேட்ட சரக்கு வாகன ஓட்டுநருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்ட வீடியோ பதிவு வெளியாகி உள்ளது.

தனியார் பள்ளிக்கு புத்தகம் ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்த போக்குவரத்து காவலர் ஒருவர் அந்த வாகனத்திற்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

தன்னிடம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புத்தகம், காப்பீடு ஆகியவை சரியாக இருந்தும் ஏன் அபராதம் விதிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய அந்த ஓட்டுநர், காவலரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டதால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வாகன சோதனையின் போது ஆவணங்கள் ஓட்டுநரின் கைவசம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு 500 ரூபாய் அபராதம் விதித்ததற்கான குறுந்தகவல் அந்த ஓட்டுநருக்கு சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments