12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு... 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி

0 3181

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்

+2 ரிசல்ட் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு SMS மூலமாகவும் அனுப்பிவைப்பு

மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் +2 தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், இ-சேவை மையங்களிலும் +2 தேர்வு முடிவுகளை அறியலாம்

12ஆம் வகுப்பு - 94.56% பேர் தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் - 94.56%

இம்முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி

+2 தேர்வில் மாணவிகள் 96.44% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இம்முறையும் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளில் 96.44% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

+2 தேர்வில் மாணவர்கள் 92.37% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 92.37% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மாணவர்களை விட மாணவிகள் 4.07 சதவீதம் அதிக தேர்ச்சி

+2 தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி

தேர்ச்சி அடைந்தவர்களில் மாணவிகள் 3,93,890, மாணவர்களில் 3,25,305 பேர் ஆவர்

+2 தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றி

+2 தேர்வில் தமிழ் பாடத்தில் 35 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்

கணினி அறிவியல் பாடத்தில் 6996 பேரும், வணிகவியலில் 6142 மாணவர்களும் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments