இரும்பு மூலப்பொருள் ஏற்றிச் சென்ற லாரியின் முன்பக்க டயர் வெடித்து விபத்து... லாரி முழுவதும் எரிந்து சேதம்

0 361

சென்னை துறைமுகத்தில் இருந்து இரும்பு மூலப்பொருள்களுடன் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் இரும்பு உருக்காலைக்குச் சென்ற லாரியின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர மண் குவியலில் மோதி, என்ஜின் பகுதியில் தீப்பிடித்தது.

இதையடுத்து, டிரைவர் இறங்கி தப்பித்த சிறிது நேரத்தில், டீசல் டேங்கும் வெடித்ததில் லாரி முழுவதும் தீ பரவியது.

எல்லை பிரச்சினையில், அருகில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருந்து வருவதற்குப் பதிலாக வெகுதொலைவில் உள்ள பொன்னேரியில் இருந்து தீயணைப்புத் துறையினர் வந்ததாகவும், ஆனால் அவர்கள் வருவதற்குள் லாரி முற்றிலும் எரிந்துபோனதாகவும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments