அயோத்தியில் 2 கி.மீ தூரத்துக்கு ரோடு ஷோ நடத்திய மோடி

0 437

அயோத்தி குழந்தை ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டை விழாவில் கலந்துகொண்ட பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி வருகை தந்தார்.

அயோத்தியில் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக வந்த பிரதமர் மோடி, குழந்தை ராமர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். பின்னர், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வழங்கி குழந்தை ராமரை வழிபட்டார்.

கோவிலில் வழிபாடு மேற்கொண்ட பிறகு, சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ நடத்தி, மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கலந்துகொண்டார்.

சாலையின் இருபுறமும் ஏராளமானோர் கையில் தாமரை மலருடன் காத்திருந்து பிரதமரை வரவேற்றனர். மோடி பயணித்த வாகனத்தின் முன், பாரம்பரிய உடை அணிந்தபடி பெண்கள் அணிவகுத்தனர். அயோத்தி தொகுதியில் மே 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments