டாஸ்மாக்கில் மதுவுக்கு கூடுதல் விலை கேட்டதாகக் கூறி தகராறு.. கடை மேற்பார்வையாளர் தலையில் பாட்டிலை உடைத்தவரை தட்டி தூக்கிய போலீஸ்

0 383

மன்னார்குடி கீழப்பனையூரில் மதுவுக்கு கூடுதல் விலை கேட்டதாகக் கூறி டாஸ்மாக் மேற்பார்வையாளரை மது பாட்டிலால் தாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த 4 பேர், குறிப்பிட்ட பிராண்டின் 2 பாட்டில்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. 140 ரூபாய் மதிப்புள்ள அந்த 2 பாட்டில்களுக்கு கடை மேற்பார்வையாளர் 160 ரூபாய் கேட்டதாகவும், கூடுதல் 20 ரூபாய் எதற்கு என்றதற்கு பாட்டிலுக்கான டெபாசிட் என்று பதிலளித்தாகவும் சொல்லப்படுகிறது.

அதற்குரிய பில் கேட்ட போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, 4 பேரும் தம்மை தாக்கியதாக மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் அருள்முருகன் என்பவரை கைது செய்த போலீசார், அவரது நண்பர்கள் 3 பேரை தேடி வருவதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments