மின் பகிர்மான நிலையத்தில் வெடித்து தீப்பிடித்து எரிந்த மின்மாற்றி....
சென்னை பட்டாபிராம் மின் பகிர்மான நிலையத்தில் 16 கே.வி.ஏ மின்மாற்றி ஒன்று வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
ஓவர் லோட் காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அங்குள்ள 3 மின்மாற்றிகளில் ஒன்று முழுவதுமாக சேதமடைந்துவிட்ட நிலையில், பக்கத்திலிருந்த மற்றொரு மின்மாற்றியும் தீப்பிடித்து, செயலிழந்துள்ளது.
அவற்றை சரி செய்யும் வரை அப்பகுதி மக்கள் ஏசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Comments