மழை வேண்டி 40 ஆண்டுகளுக்குப் பிறகு மழை சோறு எடுக்கும் வினோத வழிபாடு.. விநாயர் கோயில் கருவறையில் சிலை மூழ்கும் அளவிற்கு நீர் நிரப்பிய கிராம மக்கள்..!
பொள்ளாச்சி அருகே சாத்துப்பாறை சித்தூர் கிராமத்தில் மழை வேண்டி கிராம மக்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மழை சோறு எடுக்கும் வினோத வழிபாட்டை மேற்கொண்டனர்.
முன்னோர்களின் வழக்கப்படி மூன்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று அரிசி, பருப்பு, புளி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெற்று விநாயகர் கோயில் வளாகத்தில் சமைத்தனர்.
அதைத்தொடர்ந்து கோயில் கருவறையை அடைத்து சிலை மூழ்கும் அளவிற்கு நீர் நிரப்பி பின்னர் தண்ணீர் முற்றிலும் வடியும் வரை காத்திருந்து வழிபாடு செய்தனர்.
Comments