கேரளாவில் இருந்து கோழி கழிவுகளுடன் வந்த வாகனங்கள்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியதை தொடர்ந்து தமிழக - கேரளா எல்லையில் 26 இடங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் பறவைக் காய்ச்சல் தடுப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு , சோதனை சாவடிகள் மூலமாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புளியரை சோதனை சாவடியில்,கேரளாவில் இருந்து வந்த கோழி கழிவுகள் இருந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் கோழி ஏற்றுச்செல்லும் பெட்டிகளில் கோழி குஞ்சுகள் இருப்பது கண்டறியப்பட்டு அந்த வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன
Comments