மின்விசிறி ஜாக்கெட் அணிந்தபடி மாமல்லபுரத்தை ரசித்த ஜப்பான் தம்பதியர்
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஜப்பான் நாட்டு தம்பதியர், கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க, மின் விசிறிகள் பொருத்தப்பட்டிருந்த ஜாக்கெட்டை அணிந்திருந்தனர்.
வெயில் காலத்தில் சட்டைக்குள் வியர்த்து ஊற்றும்போது, பேட்டரி மூலம் இயங்கும் இந்த மின்விசிறிகளை ஆன் செய்தால் உடல் குளுகுளு வென இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
Comments