அமெரிக்கா விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் - போலீஸ் மோதல்

0 185

அமெரிக்காவில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை ஒடுக்க போலீசார் எடுத்த நடவடிக்கையின் போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

விஸ்கான்சின் பல்கலைக்கழக வளாகத்தில் முகாம்கள் அமைத்துக்கொண்டு போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அகற்றியபோது கைகலப்பு ஏற்பட்டது.

கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்களுக்கும் இஸ்ரேல் ஆதரவு மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டபோது போலீசார் வேடிக்கை பார்த்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments