உக்ரைன் போரில் ரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

0 264

உக்ரைனுக்கு எதிரான போரில் அந்நாட்டு வீரர்கள் மீது குளோரோபிக்ரின் என்ற ரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததற்காக, 280-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுத தயாரிப்பில் ரஷ்ய அரசுக்கு உதவியதாக பல நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.

1991-ஆம் ஆண்டின் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் கட்டுப்பாடு மற்றும் போர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மர்ம மரணத்துடன் தொடர்புடைய 3 நபர்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments