திருச்சி அரியமங்கலத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் மகன் கொலை - 5 பேர் கைது

0 289

திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் முத்துக்குமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது பெரியப்பா மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கொலை சம்பவம் செல்போனில் வீடியோவாக பதிவாகியுள்ளது.

முத்துக்குமாரின் தந்தை சேகருக்கு தனது அண்ணன் பெரியசாமியுடன் பன்றி வளர்ப்புத் தொழில் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பெரியசாமியின் மகன் சிலம்பரசன் சேகரை வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 3 ஆண்டுகளுக்கு முன் சிலம்பரசனை முத்துக்குமார் தரப்பினர் வெட்டி கொலை செய்துள்ளனர். அதற்கு பழிவாங்குவதற்காக சிலம்பரசனின் தம்பி லோகநாதன், தனது கூட்டாளிகளான தங்கமணி, இளஞ்செழியன், கூல் தினேஷ், குமரேசன் ஆகியோருடன் சேர்ந்து முத்துக்குமாரை வெட்டியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது வாய்க்கால் பாலத்தில் விழுந்ததால் லோகநாதனுக்கு கணுக்காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments