கோவையில் ரூ 2 கோடி.. துபாய் ஓட்டலில் தில்லாலங்கடி சீட்டிங் லேடியை மடக்கிய மக்கள்..! டிசைன் டிசைனாக மோசடிங்கோ..!

0 585

அதிகவட்டி தருவதாக ஆசைக்காட்டி 2 கோடி ரூபாயுடன் துபாய்க்கு தப்பிச்சென்ற கோவையை சேர்ந்த இளம் பெண், அங்குள்ள ஓட்டல்களில் இளைஞர்களை மிரட்டி பணம் பறித்த புகாரால், இந்தியாவுக்கு தப்பி வந்த போது பாதிக்கப்பட்டவர்களிடம் வசமாக சிக்கினார்.

கோவை பன்னிமடையை சேர்ந்த பங்கு வர்த்தகரான மதுமிதா தன்னிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 20 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு பணம் தருவதாகவும் வருடத்தின் முடிவின் முதலீடு செய்த 1 லட்சம் ரூபாயையும் திருப்பி தந்துவிடுவதாகவும் ஆசை வார்த்தை கூறி 2 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது.

ஒரு சில மாதங்கள் மட்டும் சொன்னபடி பணத்தை கொடுத்து விட்டு பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்த மொத்த பணமும் நட்டம் அடைந்து விட்டதாக கூறி பணம் கொடுக்க மறுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் 2 கோடி ரூபாய் மோசடி பணத்துடன் மதுமிதா துபாய்க்கு தப்பிச்சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

துபாயில் இருந்தபடியே சிலரிடம் பங்கு வர்த்தகம் செய்வதாக கூறி ஆன் லைன் மூலமாகவும் சில லட்சங்களை வாங்கி மோசடி செய்துள்ளார். திடீரென அவர் அங்கிருந்து விமானம் மூலம் எர்ணாகுளம் வருவதாக பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் வந்துள்ளது. அதன்படி எர்ணாகுளத்தில் பணம் கட்டி ஏமாந்த ஒருவர் மதுமிதாவை மடக்கிப்பிடித்து தனது காரில் ஏற்றி கோவைக்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இரவு நேரம் என்பதால் அவரை காவல் நிலையத்தில் அனுமதிக்க மருத்து விட்டனர்

காலையில் வரச்சொன்னதால், விடிய விடிய மதுமிதாவுடன் காத்திருந்த பாதிக்கப்பட்டவர்கள் அவரை காலையில் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர், அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்றும் எல்லா பணமும் நட்டம் ஆகி விட்டது என்றும் சொன்னதையே கூறியுள்ளார்

துபாயில் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் மதுமிதா அங்குள்ள ஓட்டல்களில் செய்த பிளாக் மெயில் பணம் பறிப்பு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஓட்டலுக்கு வரும் இளைஞர்களிடம் நட்பு கொள்ளும் மதுமிதா அவர்களுக்கு தனது ஆபாச புகை படங்களை அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டுவதை வாடிக்கையாக செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் , அங்குள்ள போலீசில் புகார் அளிக்க இருப்பதாக கூறியதால் அங்கிருந்து இரவோடு இரவாக தப்பி இந்தியாவுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments