அண்ணாசாலை சங்கம் ஓட்டலில் சாப்பிடச்சென்ற காவலருக்கு தர்ம அடி வட மாநில தொழிலாளர்கள் ஆவேசம்..! டேபிள் மாறி அமர சொன்னதால் தகராறு

0 641

சென்னை அண்ணாசாலையில் உள்ள சங்கம் ஓட்டலில் நண்பருடன் சாப்பிடச்சென்ற காவலரை ஓட்டல் ஊழியர்கள் கட்டையால் தாக்கி அடித்து விரட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை அண்ணாசாலையில் நள்ளிரவிலும் தடையின்றி செயல்படும் பிரபலமான சங்கம் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பாதுகாவலாராக பணியில் உள்ள சேது என்ற காவலர், தனது நண்பர் பிரவீனுடன் சாப்பிட சென்றுள்ளார். அங்கு சப்ளையராக பணியில் இருந்த வட மாநில இளைஞர், அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் சர்வீஸ் கிடையாது என்றும் வேறு டேபிளில் சென்று அமரும்படியும் கூறி உள்ளார்.

அதற்கு மறுத்து காவலர் சேது வாக்குவாதம் செய்ததால் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது. சப்ளையருக்கு ஆதரவாக இரும்பு ராடு மற்றும் மரக்கட்டைகளை கொண்டு மற்ற ஓட்டல் ஊழியர்களும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது

தாக்குதலில் சட்டைகிழிந்து காயம் அடைந்த சேது மற்றும் பிரவீன் ஆகியோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே சங்கம் ஓட்டல் மேலாளர் சசிக்குமார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் காவலர் மது அருந்தி விட்டு வந்து ஓட்டலில் தகராறு செய்து ஊழியர்களை தாக்கியதாக குற்றஞ்சாட்டி இருந்தார். ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், சம்பவத்தின் போது காவலர் சேது , மது போதையில் இருந்தாரா ? என்பது குறித்தும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments