காஸா போரை நிறுத்த வலியுறுத்தி 2 வாரங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது
நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 2 வாரங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திவந்த பாலஸ்தீன ஆதரவாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டடமான ஹாமில்டன் அரங்கை கைப்பற்றிய மாணவர்கள், அங்கிருந்த அமெரிக்க கொடியை அகற்றிவிட்டு பாலஸ்தீன கொடியை பறக்க விட்டனர்.
இதுபற்றி அறிந்து அங்கு சென்ற போலீசார், ஹாமில்டன் அரங்கின் இரண்டாம் தளத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே நுழைந்து மாணவர்களை கைது செய்தனர்.
Comments