தேர்தல் ஆணைய நோட்டீஸ் - அவகாசம் கோரும் கட்சிகள்... பாஜக 1 வாரம் கேட்டால், காங்கிரஸ் 15 நாட்கள் கேட்கிறது
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாருக்கு பதிலளிக்குமாறு அனுப்பிய நோட்டீசுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் உரிய காலக் கெடுவுக்குள் பதிலளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பிரதமர் மோடியின் பிரச்சாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் நட்டாவிற்கும் ராகுல் காந்தி மீதான புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் கேட்டு பாஜக தரப்பில் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், காங்கிரஸ் சார்பில் 15 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments