அமேசான் பார்சலில் அமெரிக்காவை சுற்றிய பூனை... அட்டைப்பெட்டிக்குள் போன பூனையை தவறுதலாக பேக் செய்த தம்பதி

0 375

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பேக் செய்தபோது பெட்டிக்குள் தங்கள் செல்ல பூனை இருந்ததை அறியாமல் அனுப்பி விட்டனர்.

அமேசானின் பல மையங்களுக்கு 6 நாட்களாக பயணித்து கலிஃபோர்னியா சென்ற அந்த பார்சலை ஊழியர்கள் பிரித்த போது உள்ளே பூனை இருந்ததைப் பார்த்தனர்.

அட்டைப் பெட்டியின் ஒரு பகுதி கிழிந்து இடைவெளி இருந்ததால் ஆக்சிஜன் கிடைத்த நிலையில், உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் 6 நாட்களாக உயிருடன் இருந்த அந்த பூனைக்கு உடனடியாக உணவும் தண்ணீரும் அளிக்கப்பட்டு கால்நடை மருத்துவரின் முதலுதவி அளிக்கப்பட்டது.

தகவல் தெரிந்ததும் விமானத்தில் பறந்து வந்த உரிமையாளர்கள் பூனையை பெற்றுச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments