துப்பாக்கியை எடுக்க விடல.. தலையை பிளந்து கொன்ற கொடூர கொலைக் கும்பல்..! பின்னணியில் பன்றி வியாபார பகை

0 627

திருச்சி அரியமங்கலத்தில் பட்டப்பகலில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் ஓட ஓட விரட்டிச்சென்று வெட்டிக் கொல்லப்பட்டார். தந்தை கொலைக்கு பின்னர் பாதுகாப்புக்கு துப்பாக்கியுடன் சுற்றியவரை வெட்டி சாய்த்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் அதிமுக பகுதி செயலாளராக இருந்தார். இவரது மனைவி கயல்விழி திருச்சி மாநகராட்சியின் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கேபிள் தொழிலுடன், பன்றி வளர்ப்பு பண்ணையும் நடத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பன்றி வளர்ப்பு தொழில் தொடர்பாக சகோதரர் பெரியசாமி குடும்பத்தினருடன் ஏற்பட்ட முன்விரோதத்தில் கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் தனது பாதுகாப்புக்கு கைத்துப்பாக்கி ஒன்றை வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது

இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் பட்டப் பகலில் முத்துக்குமாரை ஓட ஓட விரட்டிய மர்மக்கும்பல் முகத்தை சிதைத்து படுகொலை செய்து விட்டு தப்பியது. தகவல் அரிந்து வந்த அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்

அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர் . இறந்து போன முத்துக்குமார் மீதும் வழக்குகள் உள்ளதாக தெரிவித்த போலீசார், தொழில் போட்டி மற்றும் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பதாகவும், கொலையாளிகளை தேடி வருவதாகவும் தெரிவித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments