தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களுக்கு ஹூக்கான் தூண்டில் முள்ளை பயன்படுத்த தடை: புதுச்சேரி அரசு
கடலின் அடிப்பகுதியில் அதிகம் காணப்படும் கனவா மீன்களை பிடிப்பதற்காக ஹூக்கான் என்ற தூண்டில் முள்ளை பயன்படுத்தி மீன்பிடிக்க புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது.
இந்த முறையில் பிளாஸ்டிக் பாட்டிலை மணல் மூட்டையுடன் கட்டி அதில் சவுக்கு மரக்குச்சிகளை இணைத்து கயிற்றுடன் கடலின் அடிப்பகுதியில் இறக்கி மீனவர்கள் சிலர் கனவா மீன்பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடலுக்குள் இறக்கப்படும் ஹூக்கான் தூண்டில் முள் வலைகளில் சிக்கி தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக புதுச்சேரி மீனவர்கள் புகார் தெரிவித்திருந்ததை அடுத்து புதுச்சேரி மீன்வளத்துறை தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
Comments