இரு கைகள் தான் இல்லை.. நெஞ்சமெல்லாம் தன்னம்பிக்கை.. மாஸாக கார் ஓட்டும் இளைஞர்..! ஆர்.டி.ஓவிடம் ஓட்டுனர் உரிமம் பெற்றார்
சென்னை வியாசர்பாடியில் மின்சார விபத்தில் இருகைகளை இழந்த இளைஞர் ஒருவர் விடாமுயற்சியுடன் கார் ஓட்டக் கற்றுக் கொண்டு. சொந்தமாக கார் ஒன்றை வாங்கி தனக்கு ஏற்றவாறு வடிவமைத்து ஓட்டுனர் உரிமமும் பெற்றுள்ளார்
முழங்கை முட்டிக்கு கீழ் முழுமையாக இரு கைகளும் இல்லை.. ஆனால் நெஞ்சமெல்லாம் தன்னாலும் முடியும் என்ற தன்னம்பிக்கை நிறைந்து கிடந்ததால் இரு கைகளும் இல்லாமல்.. கால்விரலால் காரை ஸ்டார்ட் செய்து... கார் ஓட்டும் தான்சேன் இவர் தான்..!
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தான் சேன், 10 வயதாக இருக்கும் போது மின்சார விபத்தில் சிக்கி இரு கைகளையும் இழந்துள்ளார். தான்சேன் வளர்ந்து பெரியவனானதும் மற்றவர்களை போல தான் கையால் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆவல் இருந்துள்ளது. இதனையடுத்து கை இல்லாத மாற்றுத்திறனாளிகள் எப்படி கார் ஓட்டுகிறார்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப தீவிட முயற்சிகளை கையாண்டுள்ளார்
அதன்படி கார்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப மறு உருவாக்கம் செய்து தரும் சங்கர் என்பவரை அனுகி உள்ளார். அவரும் முழுமையான கைகள் இல்லாமல் காரை எளிதாக இயக்கும் வகையில் ஸ்டியரிங் உடன் சேர்ந்து கை போன்ற ஒரு அமைப்பை பொறுத்திக் கொடுத்தார். அதனுள் தனது பாதி கையை பொறுத்திக் கொண்டு அசால்ட்டாக கார் ஓட்ட ஆரம்பித்தார் தான் சேன்
மேலும் இடது பக்கம் இண்டிகேட்டர் ஹெஅட் லைட் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு என்று தனியாக சுவிட்ஜ்களை வைத்துக் கொடுத்துள்ளதாலும், ஆட்டோ மெடிக் கியர் கொண்டதாகவும் இருப்பதல் எவ்வித சிரமமும் இன்றி தான்சேன் காரை ஓட்டிச்செல்கிறார்
தான்சேன் கார் ஓட்டுவது விடாமுயற்சியின் வெற்றி என்றால் அவரது கார் ஓட்டும் முயற்சிக்கு தன்னுடைய மறு உருவாக்கத்தால் கை கொடுத்த சங்கரின் கரங்கள்.. உண்மையிலேயே உதவும் கரங்கள் தான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..!
Comments