இந்த மாதிரி விவசாயம் செய்தால் நிலம் மலடாகும் பயிரு அறுவடையில் பாய்சன்..! வேளாண் அதிகாரிகளின் தூக்கம் கலையுமா ?

0 359

திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூலிக்கு ஆள் கிடைப்பதில்லை எனக்கூறி தாங்கள் பயிரிட்டுள்ள பைத்தம் பயிரு மற்றும் உளுந்து செடிகளின் மீது தடை செய்யப்பட்ட பில்லு மருத்து என்றழைக்கப்படும் பூச்சுக்கொல்லியை தெளித்து செடிகளை கருகவைத்து விரைவாக அறுவடை செய்வதாக புகார் எழுந்துள்ளது


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நெல்பயிரின் அறுவடையை தொடர்ந்து வயலில் உள்ள ஈரப்பதத்தில் பச்சை பயிரு மற்றும் உளுந்து பயிர்கள் விதைக்கப்படுகின்றது.

நல்ல முறையில் செடிகள் வளர்ந்து காய்கள் முற்றிய பின்னர் செடியை பிடுங்கி நிலத்தின் ஒரு பகுதியில் நான்கைந்து நாட்கள் நன்றாக வெயிலில் உளரவைத்து பின்பு வெடித்து சிதறும் அந்த பச்சைப் பயிரை கம்பால் அடித்து, பருப்புவகைகளை தனியாக பிரித்தெடுத்து விற்பனைக்காக கடைகளுக்கு அனுப்பி வைப்பது பாரம்பரிய முறை

அதிகப்படியான ஏக்கரில் இந்த வகை பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் கூலிக்கு சரியான முறையில் ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறி செடிகளின் மீது பில்லு மருந்து என்ற தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து, பயிர்களை உடனடியாக காயவைத்து அறுவடை இயந்திரத்தின் மூலமாக பச்சைப் பருப்புகளை விரைவாக பிரித்தெடுத்து உடலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்லோ பாய்சனாக பருப்புகளை மாற்றி விற்பனைக்காக கடைகளுக்கு அனுப்பபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்பெல்லாம் இந்த வகை மருந்துகளை விவசாயிகள் விளைநிலங்களில் வரப்புகளில் இருக்கும் புற்களை அழிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இவற்றை எந்த ஒரு பயிர்கள் மீதும் தெளிக்க கூடாது என்ற தடையிருக்கும் நிலையில் தடையை மீறி இதனை பயன் படுத்துவதாகவும் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட வேளான் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்கின்றனர் இயற்கையான முறையில் பயிர்களை காயவைத்து அறுவடை செய்யும் சிறு விவசாயிகள்

பில்லு மருந்தை நிலத்தில் தெளிப்பதால், நிலங்களும் பாழ்பட்டு மகசூல் தராமல் மலடாகும் என்று இயற்கை விவசாயிகள் தெரிவிக்கும் நிலையில் இந்தவகை பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்றும் பூச்சிக் கொல்லி பயன்படுத்தி அறுவடை செய்யப்பட்ட பருப்புகளை சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்கின்றனர் மாவட்ட உணவு பொருள் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments