உடல் எடை குறைப்புக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுச்சேரி இளைஞர்... பி.பி.ஜெயின் மருத்துவமனையில் அதிகாரிகள் விசாரணை

0 351

உடல் எடை குறைப்புக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுச்சேரி இளைஞர் ஹேமசந்திரன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள பி.பி.ஜெயின் மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவ துறையின் இணை இயக்குனர் தீர்த்த லிங்கம் தலைமையிலான அதிகாரிகள் ஹேமச்சந்திரனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை, அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர். இவற்றின் அடிப்படையில் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments