வாக்கு எண்ணும் நாளில் அசம்பாவிதத்தை தடுக்க 24 மணி நேரமும் சி.சி.டி.வி.கள் இயங்க ஜெனரேட்டர் வசதி: மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரங்களை கண்காணிப்பதற்கான சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதடைந்ததாக தகவல் வெளியான நிலையில், சென்னையில் அவ்வாறு நடக்காமல் தடுக்க தடையில்லா மின் விநியோகம் உறுதி செய்யப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவரும், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரும் சென்னையின் 3 மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம்களில் ஆய்வு செய்த பின் இவ்வாறு கூறியுள்ளார்.
Comments