ஈராக்கில் 5 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்த டிக் டாக் பிரபலத்தை சுட்டுக் கொன்று விட்டு தப்பிய மர்ம நபர்

0 326

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் டிக் டாக் பிரபலம் ஒருவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

ஓம் ஃபஹத் என்ற பெயரில் பிரபலமான அந்த இளம்பெண், பாப் இசைக்கு நடனமாடி பதிவேற்றிய காணொளிகளை சுமார் 5 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

தமது வீட்டின் வெளியே காருக்குள் அமர்ந்திருந்த அவரை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத ஒருவர் சுட்டுவிட்டு தலைமறைவானதாகவும், அவரை தேடி வருவதாகவும் பாக்தாத் போலீசார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட பெண் நன்னடத்தையை மீறி அநாகரீகமாக பேசியதாக கடந்த 2023 ஃபிப்ரவரியில் ஈராக் நீதிமன்றத்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments