உதகையில் ஸ்டிராங் ரூமின் சிசிடிவி காட்சிகள் துண்டிக்கப்பட்ட விவகாரம்... சீரமைக்கப்பட்டு ஆட்சியருடன் பார்வையிட்ட கட்சி முகவர்கள்
உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமை கண்காணிக்கும் கேமராக்கள், சனிக்கிழமை மாலை சிறிது நேரம் பழுதாகி, பின்னர் சீரமைக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்தனர்.
அனைத்து கட்சி வேட்பாளர்களின் முகவர்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி அருணா உள்ளிட்டோர் ஸ்டிராங் ரூமின் சீலை பார்வையிட்டு, எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர்.
Comments