நீ சின்னப் பெண்ணாக இருக்க.. பத்திரமாக வீட்டுக்கு போ.. பாப்பா.. பை பை சொன்ன இன்ஸ்டா நண்பர்..! ஊர் ஊராக சுற்றிய சிறுமிக்கு அட்வைஸ்

0 854

இன்ஸ்டாகிராமில் பழகியவரை சந்திப்பதற்காக தோழிகளுடன் சென்ற 14 வயது மாணவியை நேரில் பார்த்த இளைஞர் காதலிக்கவில்லை என்று கூறிச்சென்றதால், சோகத்தில் தோழிகளுடன் ஊர் ஊராக சுற்றிய நிலையில் திருவனந்த புரத்தில் மீட்கப்பட்டார்.

கம்யூட்டர் சென்டர் செல்வதாக கூறிவிட்டு திசை மாறிய சிறுமி மாயமான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே முன் சிறை பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் இன்ஸ்டா மூலம் வாலிபர் ஒருவருடன் பழகி வந்தார்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி கோடை கால பயிற்சிக்காக அருகில் உள்ள கம்யூட்டர் வகுப்புக்கு அவரது சகோதரர் மற்றும் இரு பள்ளி தோழிகளுடன் சென்று வந்த நிலையில் சனிக்கிழமை வீடு திரும்பவில்லை 4 பேரும் மாயமாகினர்.

4 பேரையும் அவர்களது பெற்றோர் தீவிரமாக தேடிவந்தனர், புதுக்கடை போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் எங்கே செல்வது என்று தெரியாமல் திகைத்த படி நின்றிருந்த 14 வயது சிறுமி உள்ளிட்டப் 4 பேரையும் கேரள ரயில்வே போலீசார் மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் திருவனந்தபுரத்தில் மீட்கப்பட்ட 4 பேரும் புதுக்கடை காவல்நிலையம் அழைத்துவரப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டனர் 

சம்பவத்தன்று காலை 14 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேரும் வீட்டில் இருந்து புறப்பட்டு கம்யூட்டர் வகுப்புக்கு செல்லாமல் தேங்காய்பட்டணம் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அங்கிருந்தபடி 14 வயது சிறுமி தனது இன்ஸ்டா காதலனை அழைத்துள்ளார். அங்கு வந்த இளைஞர், சிறுமியை நேரில் பார்த்ததும் சின்ன பெண்ணாக இருக்கிறாய் ஒழுங்கா படிக்கிற வேலையை பார், நான் உன்னை காதலிக்கவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றதாக கூறப்படுகின்றது.

அதிர்ச்சியடைந்த சிறுமி காதலன் தன்னை ஏமாற்றியதாக கூறி வருத்தத்துடன் புலம்பி உள்ளார். பின்னர் எங்காவது சென்று விடலாம் என்று விபரீதமாக யோசித்து தன் இழுப்புக்கு உடன் வந்த தனது சகோதரர் மற்றும் தோழிகளையும் அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து இரயிலில் ஏறி திருவனந்தபுரம் சென்றுள்ளார். பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த நிலையில் கேரள போலீசாரால் மீட்கப்பட்டதாக தெரிவித்த புதுக்கடை போலீசார், உரிய புத்திமதி கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

படிக்கின்ற வயதில் செல்போனில் இன்ஸ்டாகிராம், முகனூல் , சாட்டிங் , டேட்டிங் என மூழ்கிக்கிடந்தால் வாழ்க்கை திசை மாறிவிடும் என்று எச்சரிக்கும் காவல் துறையினர், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் செல்போனில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்று அறிவுத்துகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments