“உன்ன பார்க்கணும் போல இருக்கு” பாசமா கூப்பிட்டு கதையை முடித்து மலையில் இருந்து வீசிய காதலன்..! காதலுக்கு பலியான சென்னைப் பெண்

0 977

காதலனை சந்திக்க சென்னையில் இருந்து ரெயில் மூலம் குடியாத்தம் சென்ற இளம் பெண்ணிடம் நகைப்பணத்தை பறித்துக் கொண்டு, அவரை கொலை செய்து மலையில் இருந்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொலையை மறைக்க நாடகமாடிய கேடி காதலன் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 33 வயதான தீபா திருமணம் ஆகி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

கடந்த 13ஆம் தேதி குடியாத்தத்தில் உள்ள ஆண் நண்பரை தொழில் விஷயமாக சந்திக்க செல்வதாக கூறி விட்டு ரெயிலில் புறப்பட்ட தீபா திரும்ப வரவில்லை என்றும் மதியத்திற்கு மேல் அவரது செல்போன் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும் தாய் சிவகாமி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்க்கிடையே செல்போன் ஒன்று குடியாத்தம் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததாக கூறி பள்ளி மாணவிகள் போலீசில் ஒப்படைத்தனர்.

அது மாயமான தீபாவின் செல்போன் என்பது தெரியவந்தது.

செல்போனை கைப்பற்றிய புளியந்தோப்பு காவல் துறையினர் குடியாத்தம் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தீபாவன் செல்போனில் கடைசியாக, கீழ் ஆலத்தூர் நாகுல் பகுதியை சேர்ந்த ஹேமராஜ் என்பவர் பேசியது தெரிய வந்தது.

ஹேமராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் 10 நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தீபா தன்னை நேரில் பார்க்க விரும்பி வந்து, தன்னை தவறான செயலுக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை செய்தது மலையில் இருந்து வீசியதாக கூறி சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்றான்

அங்கு கிடந்த கத்தி மற்றும் கைப்பையை கைப்பற்றிய போலீசார் காதலியை பார்க்கும் இடத்திற்கு கத்தியை எதற்காக எடுத்து வந்தாய் ? 10 நாட்களில் நெருங்கி பழகி விட்டாரா ? என்ற போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினான் ஹேமராஜ்

இறுதியில் திருமணம் செய்து கொள்ள கூறியதால் கொலை செய்ததாக மாற்றிக் கூறி போலீசாரை குழப்ப முயன்றான்

மலையடிவாரத்தில் அழுகிய நிலையில் கிடந்த தீபாவின் சடலத்தை மீட்ட போலீசார் , ஹேமராஜை காவல் நிலையம் அழைத்துச்சென்று தடயங்களின் அடிப்படையில் விசாரித்தனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்த போது கணவரை பிரிந்து வாழ்ந்த தீபாவுடன், ஹேமராஜுக்கு காதல் மலர்ந்துள்ளது.

செல்போனில் பேசி காதல் வளர்த்த நிலியில் தீபாவிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு “பார்க்கனும் போல இருக்கு” என்று பாசமாக பேசி குடியாத்தம் வரவழைத்த ஹேமராஜ், தீபாவை ஆளில்லாத மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.

முடிவில் அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதும் நீ என்னை விட 7 வயது மூத்தவள் என்று கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்த ஹேமராஜ் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடித்துவிட்டு சடலத்தை மலையடுவார புதருக்குள் வீசியதாகவும், செல்போனை தண்டவாளத்தில் வீசிச்சென்றதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கைதான ஹேமராஜ் ஏற்கனவே குடியாத்தம் ரெயில் நிலையத்தில் பெண்ணை நகைக்காக கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவன் என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments