சீன அதிபருடன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
உக்ரைன் போரில், ரஷ்யாவிற்கு நேரடியாக ஆயுதங்களை வழங்காதபோதும், ஆயுதங்களை தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை சீனா வழங்கிவருவதற்கு ஆண்டனி பிளிங்கென் ஆட்சேபம் தெரிவித்தார்.
பதிலுக்கு, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, தைவானுக்கு அமெரிக்கா உதவிவருவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். அறிவியல், வர்த்தகம், தொழில்நுட்பம் போன்றவற்றில் சீனாவின் முன்னேற்றத்தை தடுக்க அமெரிக்கா எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Comments