ஆந்திர மாநிலத்தில் தலையில் பேண்ட்எய்டு ஒட்டியபடி வேட்பு மனு தாக்கல் செய்த ஜெகன்மோகன்

0 355

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடந்த 13 ஆம் தேதி நடத்தப்பட்ட கல்வீச்சில் காயமடைந்த முதலமைச்சர் ஜெகன்மோகன், தலையில் பேண்ட்எய்டு ஒட்டியபடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தனது தொகுதியான புலிவெந்தலாவில் வேட்பு மனு தாக்கல் செய்தபோதும் அவர் தலையில
பேண்ட்எய்டு ஒட்டியே காணப்பட்டார்.

இதனை கிண்டல் செய்யும் வகையில் ஜனசேனா கட்சியின் திருப்பதி தலைவர் கிரண்ராயல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலையில் பேண்ட் எய்டு ஒட்டிக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தனர். வேட்புமனு தாக்கலின்போது ஜெகன்மோகன் பாக்கெட்டில் இருந்த பேனா எழுதாதது குறித்தும் அவர்கள் கேலி செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments